மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்


மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். செயலர் கிரி வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி அலுவலக வரவு-செலவு கணக்குகள், ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதம் நடந்தது. மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான அமர்வு படி, தினப்படி, நிலையான பயணப்படி வழங்குவதற்கான ஒப்புதல் அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சிக்குழு தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story