வால்பாறையில் உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு


வால்பாறையில் உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
x

வால்பாறையில் உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே அட்டகட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பூபதி ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளின் கல்வி திறன், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து வால்பாறை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தங்கும் வசதிகள், கழிப்பிட வசதி, சுகாதாரம், குடிநீர் வசதி மற்றும் உண்டு உறைவிட பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

மலைவாழ் கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார்.


Next Story