இ- பட்டாவாக மாற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


இ- பட்டாவாக மாற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x

நாட்டறம்பள்ளி அருகே இ- பட்டாவாக மாற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை, இணையதளத்தில் இ- பட்டாவாக மாற்றம் செய்வது தொடர்பாக பயனாளிகளின் விவரத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி, மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

1 More update

Next Story