ஆவின் பால் பண்ணை அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

ஆவின் பால் பண்ணை அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் சுமார் 2,000 ஏக்கர் உள்ளது. இந்த இடத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கோரிக்கை விடுத்து பேசினார்.
இந்த நிலையில், புதிதாக ஆவின் பால் பண்ணை மற்றும் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்க உள்ள இடத்தை நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது நாட்ட றம்பள்ளி தாசில்தார் க.குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






