மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்றுள்ளார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த முருகதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடந்த 3 மாத காலமாக காலிப் பணியிடமாக இருந்து வந்தது. சமீபத்தில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மணிமேகலை, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக மணிமேகலை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மாவட்ட கலெக்டர் மகாபாரதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற மணிமேகலையை நேரில் சந்தித்த வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்ட 2½ ஆண்டுகளில் 2-வது மாவட்ட வருவாய் அலுவலராக மணிமேகலை பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story