மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் மாவட்ட சிறப்பு மாநாடு


மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் மாவட்ட சிறப்பு மாநாடு
x

மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் மாவட்ட சிறப்பு மாநாடு நடந்தது.

கரூர்

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் மாவட்ட சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். இதில் 12 மணி நேர வேலைக்கான சட்ட திருத்தம், அனைத்து தொழிற்சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று, அந்த மசோதாவை திரும்ப பெற்ற முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்டு 9 அன்று சென்னையில் நடைபெற உள்ள பெருந்திரள் அமர்வில் கரூர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பங்கேற்க செய்வது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிப்பது. மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ரேஷன் முறையை பலப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்ததாரர் முறையை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story