தண்டராம்பட்டு பகுதி ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கல் அதிகாரி திடீர் ஆய்வு

தண்டராம்பட்டு பகுதி ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கல் அதிகாரி திடீர் ஆய்வு
x

தண்டராம்பட்டு பகுதி ரேஷன்கடைகளில் மாவட்ட அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு பகுதி ரேஷன்கடைகளில் மாவட்ட அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.

தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர், ராயண்டபுரம் தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று மாவட்ட வழங்கல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு சரியான முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறதா?, கணக்குகள் சரியான முறையில் பராமரிக்கப் படுகிறதா? பொதுமக்களிடம், விற்பனையாளர்கள் கனிவாக நடந்து கொள்கிறார்களா என்று பொதுமக்களிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாக்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story