மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஆய்வு
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஆய்வு
நீலகிரி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தாமரைசெல்வி, தெங்குமரஹடா அரசு உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டார். மேலும் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் குடியிருப்புகளுக்கு சென்று பள்ளி செல்லா குழந்தைகளையும், இடைநிற்றல் மாணவர்களையும் கண்டறிந்து, அவர்கள் கல்வியை தொடர ஆலோசனை வழங்கினார். மேலும் அங்குள்ள அரசு ஆரம்பப்பள்ளியை பார்வையிட்டு சமையல் கூடம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் கல்லம்பாளையம் பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட வகுப்பறையை பார்வையிட்டார். தொடர்ந்து அல்லி மாயார் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களின் எழுத்தறிவு, வாசிப்பு திறன், அடிப்படை கணித திறனை பரிசோதித்தார்.
Related Tags :
Next Story