மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு
அரசு மருத்துவமனைகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனா்
சிவகங்கை மாவட்டத்தில், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை 2-வது நாளாக நேற்றும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பொது சுகாதாரத்துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள் குறித்து, சூரக்குளம்-புதுக்கோட்டை பகுதியில், பயனாளியின் இல்லத்திற்கே சென்று, வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, நாட்டரசன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காளையார்கோவில் அரசு மருத்துவமனை ஆகியவைகளின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துணை இயக்குனர்கள்.விஜய்சந்திரன் (சுகாதாரம்),உள்பட பலர் கலந்து கொண்டனர்.