புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்


புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
x

வந்தவாசியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வந்தவாசியில் ஆரணி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் ஏ.ஜோசப் தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் கே.ஹரி முன்னிலை வகித்தார். ஆர்.சுரேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி தலைவர் மனவூர். ஜி.மகா, மாநில வழக்கறிஞர் அணி தலைவர் பி.சைமன்பாபு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் பழனி, மாநில துணைச் செயலாளர் எம்.திருமால், மாநில செய்தி தொடர்பாளர் எம்.பி.வேதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். ஆதிக்கம் அற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஏ.ஹரிசங்கர், எஸ்.சுரேஷ், அருண், ரப்பி, கதிரவன், ஷாம், விஷால், சந்துரு, அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர துணைத்தலைவர் டி.சஞ்சய் நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story