ஒவ்வொரு வார்டும் 4 பகுதிகளாக பிரித்து தீர்மானம் நிறைவேற்றம்


ஒவ்வொரு வார்டும் 4 பகுதிகளாக பிரித்து தீர்மானம் நிறைவேற்றம்
x

ஒவ்வொரு வார்டும் 4 பகுதிகளாக பிரித்து தீர்மானம் நிறைவேற்றம்

தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு வார்டும் 4 பகுதிகளாக பிரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி பேசுகையில், கும்பகோணம் மாநகராட்சியின் 48 வார்டுகளையும் ஒவ்வொரு வார்டும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு எல்லைகள் வரையறை பட்டியல் தயார் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முழுமையாக தெரிவிக்கவேண்டும்.

எல்லைகள் வரையறை

துணை மேயர்: மாநகராட்சியில் தீர்மானங்களை முழுமையாக படித்த பிறகு கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு மற்றும் மாநகராட்சி சட்டம் பிரிவுகளின் படி மாநகராட்சி வார்டுகளை ஒவ்வொரு வார்டையும் 4 பகுதிகளாக பிரித்து எல்லைகள் வரையறை செய்திட ஆணையிடப்பட்டுள்ளது.

வளர்ச்சிப்பணிகள்

அதன்படி ஒரு வார்டு கவுன்சிலர் தங்கள் வார்டில் 4 துணை உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து தங்களின் கீழ் 4 பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள், சேவைகள் குறித்து பொதுமக்களின் முன்னிலையில் பேசி முடிவெடுத்து, பிறகு மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தால் திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படியே கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர். அதனை தொடர்ந்து கூட்டத்தில் 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


Next Story