கணவரைப் பிரிந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை


தினத்தந்தி 30 Aug 2023 12:45 AM IST (Updated: 30 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கணவரைப் பிரிந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் ரேணுகா தோட்டத்தை சேர்ந்தவர் பிரியா (வயது27). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் தனிமை வாட்டியதால் அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரியா நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Next Story