மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்


மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
x

நாட்டறம்பள்ளி அருகே மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஜங்களாபுரம் கூட்ரோட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செண்பகாதேவி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

விழாவில் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், பாடல், உரையாடல் மற்றும் மழலையர் குழந்தைகளுக்கு வர்ணம் தீட்டும் போட்டிகள், தீபாவளி நல்வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் போட்டிகள், தீபம் ஏற்றுதல் போட்டிகள், கட்டுரை போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story