தீபாவளி பண்டிகை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவுஊழியருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு10 சதவீத போனஸ் அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக,ஒவ்வோர் துறையும் தனித்தனியாக தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவர்.
Related Tags :
Next Story