தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் இந்தாண்டு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - போக்குவரத்துறை அமைச்சர் அறிவிப்பு


தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் இந்தாண்டு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - போக்குவரத்துறை அமைச்சர் அறிவிப்பு
x

தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் இந்தாண்டு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் மக்கள் சிரமம் இல்லாமல் சென்று வரும் வகையில், புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார். சென்னை, கோவை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story