தீபாவளி பண்டிகை - இறைச்சிக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்...


தீபாவளி பண்டிகை - இறைச்சிக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்...
x
தினத்தந்தி 24 Oct 2022 5:02 AM GMT (Updated: 24 Oct 2022 5:18 AM GMT)

தீபாவளியையொட்டி அதிகாலை முதலே இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது.

நெல்லை,

தீபாவளிப்பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு அசைவ உணவுகள் தயார் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, இன்று இறைச்சி வாங்குவதற்காக கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் இறைச்சி வாங்கிச்செல்கின்றனர்.

குறிப்பாக நெல்லையில் மட்டன் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பிராய்லர் கோழி 220 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இறைச்சிகளின் விலை சிறிது அதிகரித்து கானப்பட்டாலும், மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சியை வாங்கிச்செல்கின்றனர்.


Next Story