தீபாவளி பண்டிகை: நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை


தீபாவளி பண்டிகை: நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
x

பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை,

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, நாளை (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு நாளை (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.






Next Story