திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம்
திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம்
திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் ஈரோடு முதல் கடலூர் வரை 29 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயணத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் ஈரோடு திருநகர்காலனியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, முன்னாள் மத்திய மந்திரியும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பொதுச்செயலாளர் ஜெயக்குமார், அமைப்பாளர் குணசேகரன், பேராசிரியர் காளிமுத்து, காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.வி.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.சாதிக், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.