கோபியில் சமூக நீதி பாதுகாப்பு- திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம்; கி.வீரமணி பங்கேற்பு
கோபியில் சமூக நீதி பாதுகாப்பு- திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம்; கி.வீரமணி பங்கேற்பு
கோபி
கோபியில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு சண்முகம், மாவட்ட காப்பாளர் சீனிவாசன், மாவட்ட பகுத்தறிவு கழக தலைவர் சீனு. தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் சென்னியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் கலந்து கொண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு சால்வைக்கு பதிலாக ஜமுக்காளமும், குடையும் வழங்கப்பட்டது. இதில் தலைமை கழக பேச்சாளர் அதிரடி கா.அன்பழகன், புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, தி.க. பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், மாநில தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநில தி.மு.க. நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன் மற்றும் குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
முடிவில் ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.