தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின் படி மகளிர் உரிமைத்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும், கர்நாடக அரசு உரிய நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story