தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி சுங்கச்சாவடியில், கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஐ.ஆஞ்சி, மாவட்ட துணைச் செயலாளர் பயாஸ் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story