தே.மு.தி.க. கொடி நாளை சிறப்பாக கொண்டாடுங்கள் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்


தே.மு.தி.க. கொடி நாளை சிறப்பாக கொண்டாடுங்கள் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
x

இது 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தே.மு.தி.க.வாக உதயமானது.

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, பின்னாளில் நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்தது. பின்னர், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி புரட்சி தீபம் தாங்கிய மூவர்ண கொடியை ரசிகர் மன்றத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர், இது 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தே.மு.தி.க.வாக உதயமானது. கட்சி கொடிக்கு என்று ஒரு நாளை அறிவித்து, அதனை கொண்டாடும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். எனவே, இந்த கொடி நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

அதன்படி, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற கட்சியின் கொள்கைப்படி இனிய கொடி நாளை கட்சித் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும். கொடிநாளில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story