தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல்லில் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டுக்கல் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பிரமுகர் சவுக்கத் அலியின் மகள் யாஸ்மின் பானுவுக்கும், திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது ஆசிப் உசேன் மகன் சையது முகமது மீரானுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் பாறைப்பட்டி பிஸ்மி நகர் அருகே உள்ள தனியார் மகாலில் அவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது. இதில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னதாக திண்டுக்கல் சீலப்பாடியில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் திண்டுக்கல்லில் உள்ள காமராஜர் மற்றும் காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் திண்டுக்கல் பஸ் நிலையம், அங்குவிலாஸ், பேகம்பூர், குடைபாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பவுன்ராஜ், கேப்டன் மன்ற செயலாளர் விஜய முரளி, திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் பொன் ஆண்டவர், கிழக்கு ஒன்றிய செயலாளர் குழந்தை, வக்கீல் பிரிவு துணை செயலாளர் பாக்கிய செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முகமது யூசுப், மேற்கு மாவட்ட பொருளாளர் திருமுருகன், மாவட்ட நிர்வாகி மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.