தி.மு.க. கவுன்சிலர்கள் 17 பேர் போட்டி
கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 17 வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 17 வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது.
திட்டக்குழு தேர்தல்
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதி காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடக்கிறது.
இதில் மொத்தம் 17 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த தேர்தலில் 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 100 மாநகராட்சி கவுன்சிலர்கள், 33 பேரூராட்சி களின் 511 கவுன்சிலர்கள் என மொத்தம் 824 பேர் ஓட்டுப் போடுவார்கள். ஓட்டு எண்ணிக்கை அன்று மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார்.
கோவை தெற்கு பகுதி மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு பகுதி மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்த கூட்டத்தில் திட்டக்குழு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் இ.ஆனந்தன், எம்.ராஜன், ராதா வேணி, டி.சரவணகுமார் ஆகியோரும்,
மாநகராட்சி கவுன்சிலர்களில் சிரவை சிவா என்ற பழனிசாமி, கார்த்திக் கே.செல்வராஜ், சிங்கை சிவா, மார்க்கெட் மா.மனோகரன், எஸ்.அப்துல் காதர், நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜம்ருத் பேகம், என்.ராமு, உமாமகேஸ்வரி, ஆர்.கிருஷ்ணகுமாரி, எஸ்.ஸ்ரீதர், கனகராஜ், மோகன பிரியா, பி.கபிலன் ஆகிய 17 பேர் போட்டியிடுகின்றனர்.
அவர்களை வெற்றி பெற செய்ய தி.மு.க. உள்ளாட்சி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் பாடுபட வேண்டும் என்று மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றி செல்வன், முன்னாள் எம்.பி. நாகராஜன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு, கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தினகரன், கோட்டை அப்பாஸ் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.