தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அரியலூரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ேநற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது கூறியதாவது:-
திராவிட மாடல் அரசு கடந்த 2 ஆண்டுகளில் சொன்னதையும் செய்துள்ளது, சொல்லாததையும் செய்துள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பஸ் பயணம், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48, வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
தவறான குற்றச்சாட்டு
தமிழகத்தில் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டில் பஸ் செல்லாத கிராமத்திற்கு கூட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே எந்த கிராமத்திற்கு வேண்டும் என்றாலும் அரசு பஸ்சில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து செல்ல தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவைத்தலைவர் மாலா தமிழரசன் வரவேற்றார். முடிவில் நகர துணை செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.