ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில்பரிசல் ஓட்டிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்தி.மு.க. மாவட்ட செயலாளர் உறுதி

தர்மபுரி:
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் ஓட்டிகள் மற்றும் கடை வியாபாரிகளை தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போதும், தண்ணீர் வரத்து குறையும் போதும் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து பரிசல் ஓட்டிகள் மற்றும் கடை வியாபாரிகள் விளக்கி கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் ஓட்டிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அப்போது நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணைத் தலைவர் பெரியண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகிகள் மோகன், மணி, காளியப்பன், வினோத், முத்தையா, குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.