தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:46 PM GMT)

சங்கரன்கோவிலில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில், வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்து தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் பொன்முத்தையா பாண்டியன், வெற்றி விஜயன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, வாசுதேவநல்லூர் பேரூர் கழகச் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர்கள் சிவகிரி கோமதிசங்கரி, ராயகிரி இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* ராயகிரி பேரூராட்சி 4-வது வார்டில் பேவர் பிளாக்சாலை, மழை நீர் வடிகால் வாறுகால்கள் ரூ.34.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்தார். ராயகிரி பேரூராட்சி தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், பேரூர் செயலாளர் கே.டி.சி. குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுதா வரவேற்றார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

* சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கோவில்களுக்கு அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார். சங்கரன்கோவில் அம்பேத்கர் 1-வது தெரு மற்றும் கக்கன் நகர் பகுதியில் உள்ள வடகாசி அம்மன், பார்வதி அம்மன் கோவிலுக்கும், காமராஜர் 2-வது தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கும் திருப்பணிகளுக்காக தலா ரூ.1 லட்சம் வழங்கினார். தொ.மு.ச. ஜெயராமன் மற்றும் வார்டு செயலாளர்கள் நிதியை பெற்றுக் கொண்டனர்.


Next Story