தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்


தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x

ராணிப்பேட்டை முத்துக்கடையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று.

ராணிப்பேட்டை

தி.மு.க. சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் தொகுதி ஜெகத்ரட்சகன் எம்.பி. கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். தகவல் தொழில்நுட்ப மாநில ஆலோசகர் லெனின் கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம், துரைமஸ்தான், குமுதா, ஏவி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், அசோகன், கண்ணையன், கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், வடிவேல், நகரமன்ற தலைவர்கள் சுஜாதா, ஹரிணி, அம்மூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மகேஷ், நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை உள்பட தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனை மருத்துவர் அன்புசுரேஷ் உண்ணாவிரத்தை முடித்துவைத்தார். முடிவில் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story