தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம்-23-ந் தேதி நடக்கிறது


தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம்-23-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 10 மணிக்கு பரமன்குறிச்சி அரசு திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

எனவே கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி, ஒன்றியக் குழு, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story