தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு


தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
x

நெல்லையில் தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்

திருநெல்வேலி

நெல்லையில் தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தி.மு.க. பிரமுகர்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). தி.மு.க. பிரமுகர். இவருடைய அண்ணன் அந்த பகுதியில் ஓட்டல், டீக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகியான ராஜேஷ் (40) என்பவர் அந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு கண்ணனுக்கும், ராஜேசுக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

நள்ளிரவில் கண்ணன் ஓட்டலில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில் காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து கண்ணன் தரப்பில் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், ராஜேஷ், ராஜேசின் மனைவியும், முன்னாள் மாநகராட்சி மேயருமான புவனேசுவரி மற்றும் நாகஜோதி, கிருஷ்ணகுமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக, குற்றம் சாட்டி உள்ளார். அதன்பேரில் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கண்ணன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக கூறி, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் நாகஜோதி சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி கண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


Next Story