தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
x

தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 2, ஆண்டு திமுக அரசின் சாதனை தெருமுனை பிரசார கூட்டம் அச்சமங்கலம், மேல்அச்சமங்கலம், பூர்காமானிமிட்டா, ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. டி. அசோக்குமார் தலைமை வகித்தார், அனைவரையும் மாவட்ட பிரதிநிதி ஜி பிரபாகரன், டி பிரகாசம் கே பரமசிவம் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.தேவராஜ் எம்.எல்.ஏ., தலைமைக் கழகப் பேச்சாளர் கந்திலி கரிகாலன் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் தி.மு.க.ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக் குமார் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமையில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஈடில்லா ஆட்சி 2 ஆண்டில் என்ற தலைப்பில் மகளிர் மேம்பாடு, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி கடன், 209 லட்சம் மாணவியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத் தொகை, காலைஉணவுத் திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், நான் முதல்வன் திட்டம், விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், துணை அமைப்பாளர் வி.வி.கிரிராஜ், ஒன்றிய அவைத் தலைவர் துரைசாமி, ஒன்றிய துணை செயலாளர் பி.பிரபு, ராஜா, முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம், மனோகரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வீரப்பன், பரமசிவம், அன்புரோஸ், அண்ணாதுரை, பொன்னுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், ிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story