தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப்புக்கு உற்சாக வரவேற்பு
நெல்லையில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
தி.மு.க. 15-வது அமைப்பு தேர்தலில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக 3-வது முறையாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக முருகன், துணை செயலாளர்களாக விஜிலா சத்யானந்த், எஸ்.வி.சுரேஷ், தர்மன் ஆகியோரும், பொருளாளராக முத்துகிருஷ்ணன் என்ற வண்ணை சேகரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மு.பேச்சிபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்களாக நடராஜன், பி.எம்.சரவணன், கே.ஆர்.ராஜூ, ராஜேஸ்வரி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்த அவருக்கு பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதி களைகட்டி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு யானை மாலை அணிவித்தது. அப்போது அவருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர பகுதியில் உள்ள பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சிதம்பரனார், ஒண்டிவீரன், அழகு முத்துகோன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வலெட்சுமி அமிதாப், முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சுதாமூர்த்தி, மூளிகுளம் பிரபு, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, மகேஸ்வரி, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், வில்சன் மணித்துரை, ரவீந்தர், ஜெகநாதன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அமிதாப்,
மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஆறுமுகராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.