தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கழுகுமலை அருகே தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் செந்தில் கடற்கரை தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜான்பிரிட்டோ, பஞ்சாயத்து தலைவர் குணசேகரன், கிளை செயலாளர்கள் சூசைராஜ், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சகாயராஜ் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி ஐசக்தவராஜ் தொகுப்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டோபர், சேர்மதுரை, கடற்கரை, பெரியதுரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமார் சங்கர், இளைஞர் அணி சார்பில் குட்டி, மகளிரணி சார்பில் மரியஜெகஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், இளைஞர் அணி தினேஷ் நன்றி கூறினார்.