தி.மு.க. தலைவர்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை


தி.மு.க. தலைவர்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:45 PM GMT)

தி.மு.க. தலைவர்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகளிரணியினர் போலீசில் புகார் செய்தனர்

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமையில், மகளிரணி தலைவர் மணிமேகலை, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது.:-

கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டு மேடையில் முதல்-அமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாகவும் பேசி உள்ளனர். இந்த செயல் பொதுமக்கள், தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த செயலை செய்த சம்பந்தப்பட்ட நபர்கள், உள்ளிட்ட மாநாடு நடத்திய நபர்கள் மீது வழக்குபதிவு செய்து உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


Next Story