கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும் கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரும்    உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும்    கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 Oct 2022 6:45 PM GMT (Updated: 26 Oct 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும் கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சேராப்பட்டு கிராமத்தில் நடந்தது. இதற்கு ஒன்றிய அவைத் தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் அலமேலு சின்னத்தம்பி, சேகர், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கல்வராயன்மலை மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, வருகிற 30-ந்தேதி உதயசூரியன் எம்.எல்.ஏ.வின் மகன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும், வரவேற்பு மற்றும் திருமண விழாவில் கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணி, அறிவுக்கரசு, செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னகண்ணு, துரைசாமி, சாரதா சின்னையன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மாயக்கண்ணன் நன்றி கூறினார்.


Next Story