தியாகதுருகம் நகர தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்


தியாகதுருகம் நகர    தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:47 PM GMT)

தியாகதுருகம் நகர தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

தியாகதுருகம் நகர தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் மலையரசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது, வருகிற 30-ந்தேதி தியாகதுருகம் வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர்கள் பரசுராமன், அமுதா, அக்பர் உசேன், பொருளாளர் ராஜசேகர், ஒன்றிய பிரதிநிதிகள் கதிர்வேல், சக்திவேல், மாவட்ட பிரதிநிதி சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story