தென்காசியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்பு


தென்காசியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்;  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:37+05:30)

தென்காசியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

தென்காசி

சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தென்காசி ஒருங்கிணைந்த தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, செல்லத்துரை, ஜேசுராஜன், ஷேக் தாவூது, முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட அவைத்தலைவர்கள் சுந்தரமகாலிங்கம், பத்மநாபன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

தென்காசிக்கு வருகிற 5-ந்தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 60 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சென்னையில் இருந்து ரெயில் மூலம் தென்காசிக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றாலம் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். தொடர்ந்து காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வல்லம் வழியாக வந்து வேல்ஸ் பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

5 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் முதல்-அமைச்சருக்கு அனைத்து பகுதிகளிலும் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். விழா நிகழ்ச்சி முடிந்து ராஜபாளையம் செல்லும் முதல்-அமைச்சருக்கு தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட பொருளாளர் முகமது ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவிஜயன், முத்தையாபாண்டியன், அழகுசுந்தரம், சீனித்துரை, அன்பழகன், நகர செயலாளர்கள் அப்பாஸ், அந்தோணிசாமி, பிரகாஷ், வக்கீல் வெங்கடேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், நகராட்சி தலைவர்கள் தென்காசி சாதீர், சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, கடையநல்லூர் மூப்பன் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story