தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்


தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
x

தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கரூர்

தி.மு.க. ஒன்றிய செயலாளர்களுக்கு கிளைக் கழகங்களை நாடி ஒன்றிய கழகம் என்பதன் படி கட்சியினரை சந்தித்து கூட்டம் நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுரைப்படி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ மேற்பார்வையில், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மணியன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் நஞ்சுண்டேஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவர் எ.பெருமாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.பி. கார்த்தி, கட்சி நிர்வாகிகள் செழியன், முரளி கிருஷ்ணன், பாரதிராஜா உட்பட அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த 109 கிளை கழகங்களுக்கும் நேரடியாக சென்று நிர்வாகிகள் சந்திக்கும் கூட்டம் தொடங்கப்பட்டது.

கூட்டத்தில் மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை பெற்றுத் தருவது மற்றும் கட்சி பணி குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


Next Story