தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
முனைஞ்சிப்பட்டியில் தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முனைஞ்சிப்பட்டியில் தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் வரவேற்று பேசினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார்.
பஞ்சாயத்து தலைவர்கள் இசக்கிதுரை, ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மீனா சுப்பையா, அகஸ்டின் கீதராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணைச்செயலாளர் வெ.நம்பி, நகரச்செயலாளர் முருகையா, நிர்வாகிகள் ராஜகண்ணு, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலங்குளம், இட்டமொழி, வெங்கட்ராயபுரம், பாப்பான்குளம் பகுதிகளில் எஸ்.ஆரோக்கிய எட்வின் முன்னிலையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story