தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்கு


தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்கு
x

தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மாநகராட்சி 31-வது வார்டில் வரகனேரி நடுத்தெருவில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் மோட்டார் பழுதடைந்து, ஆழ்குழாய் தூர்ந்து விட்டது. இதை சரி செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வார்டு குழு கூட்டத்தில் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டி இடையூறாக இருப்பதாக கூறி, குடிநீர் தொட்டி அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகி சரவணன், மலைக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் உதவியுடன் அதை இடித்து தரைமட்டமாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாநகராட்சி உதவி ஆணையர் ரவி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணன், கார்த்திக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story