தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் பாலக்கரை

தமிழக அரசு இயற்றிய 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம், மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, மாநில துணை செயலாளர் ராஜ்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் பி.ஜி.சேகர், நகர தலைவர் கந்தசாமி, ம.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் முதனை மூர்த்தி, இந்திய குடியரசுக்கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் மங்காபிள்ளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கலைச்செல்வன், மக்கள் அதிகாரம் மாநில பொதுச்செயலாளர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு எதிராக தமிழக அரசு இயற்றிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி

பண்ருட்டி பஸ் நிலையம் இந்திரா காந்தி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் உத்தராபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் தமிழக அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேர வேலை சட்டத்தை வாபஸ் பெற கோஷம் எழுப்பினர்.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் சுரேந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், வட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வேப்பூா் கூட்டுரோடு

அதேபோல் வேப்பூர் கூட்டுரோட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் வி.சி.க. ஒன்றிய இணை செயலாளர் முத்துகருப்பன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சிறுபாக்கம் ரத்தினசாமி, நகர் சோமு, இளையராஜா, நல்லூர் சாமிதுரை, சேப்பாக்கம் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story