மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூரில் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிர் அணி தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி வரவேற்று பேசினார். க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை தடுத்த நிறுத்த வேண்டும். அங்கு பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும். தொடர்ந்து நடைபெறும் மதவெறி மோதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story