தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்


தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்
x

வருகிற நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சேலத்தில் தங்கபாலு கூறினார்.

சேலம்

சேலம்:

ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ராஜகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பொறுப்பாளர் சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தேர்தல் பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை பட்டியலை வெளியிட்டனர். அதன்பிறகு தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலத்தில் தற்போது 18 ஆயிரத்து 53 பேர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகள் பல சாதனை திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியில் 8 ஆண்டு சாதனை எதுவும இல்லை. பண இழப்பு மதிப்பீடு, விவசாய சட்டங்கள் திரும்ப பெற்றது தான் பாரதீய ஜனதா கட்சியின் சாதனை.

40 இடங்களிலும் வெற்றி

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது சிதைந்து உள்ளது. முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம், அவலுடைய மகன் ஆகியோர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்களை அவமானப்படுத்துவதற்காக பாரதீய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் பெற்றி பெறும்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் பன்னீர்செல்வம், மேகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், திருமுருகன், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் வரதராஜ், விவசாய அணி மாவட்ட தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார், கவுன்சிலர் கிரிஷாகுமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டவர்கள்.


Next Story