தி.மு.க. தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்: 31-ந் தேதி நடைபெறுகிறது
தி.மு.க. தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வழியாக 31-ந் தேதி நடைபெறுகிறது.
சென்னை,
தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கட்சியால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வழியாக நடைபெறும்.
இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆலோசனை வழங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story