பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள்


பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள்
x

பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகர், நகர்மன்ற துணை தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

தங்களது வார்டு பகுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தாலும், மேலும் தங்களது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை தங்களிடம் கேட்டு தீர்மானத்தில் சேர்க்காத காரணத்தாலும் மாதாந்திர கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்ததாக கூறப்பட்டது. அவர்களை தவிர்த்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மற்றும் சில தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்ததால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story