தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்


தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்
x

தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் பேரூராட்சி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மாடசாமி. இவர் நேற்று காலை பேரூராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், 'எனது வார்டில் கடந்த 14 மாத காலத்தில் எந்தவொரு திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் திட்டப் பணிகளுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன்' என்று கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகம் மற்றும் போலீசார் அங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குடிநீர் திட்டப் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதால் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். வார்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கவுன்சிலர் மாடசாமி போராட்டத்தை கைவிட்டார்.


Next Story