தி.மு.க. அரசை கண்டித்து ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து  ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க. அரசை கண்டித்து ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்,

ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்தவகையில், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓமலூர் வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓமலூர் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணி தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதில் ஒன்றிய அவைத்தலைவர் முருகன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் பாலிக்கடை பெரியசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பச்சியப்பன், ஓமலூர் நகர செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர்கள் சுதா அய்யனார், செந்தில்குமார், சரவணன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்புச்செல்வன், நகர பேரவை செயலாளர் தளபதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேச்சேரி

சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு விலைவாசி உயர்வை கண்டித்து மேச்சேரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார்.

மாநில பொறுப்பாளர்கள் எமரால்டு வெங்கடாசலம், லலிதா சரவணன், மேச்சேரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கலையரசன், பேரூராட்சி முன்னாள் தலைவர் குமார், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சாமியண்ணன், பேரூர் செயலாளர் மாணிக்கம், மேச்சேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி, மேச்சேரி பேரூராட்சி கவுன்சிலர் வெங்கட்ராஜ், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மணிவண்ணன், ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மேச்சேரி ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தன், சாமிநாதன், சிவசாமி, சரிதா, ஒன்றிய பொறுப்பாளர்கள் அய்யப்பன், ராஜரத்தினம் இளங்கோ, அன்புமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கொங்கணாபுரம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து கொங்கணாபுரத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி தலைமை தாங்கி தமிழக அரசை கண்டித்து பேசினார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் தலைமை கழக பேச்சாளர் ஏ.வி.கோவிந்தராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் சாமி என்ற பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் தங்காயூர் ராஜா, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ரவி, முத்துசாமி, பிரேம்சந்தர், லோகநாதன், மணி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மகுடஞ்சாவடி

இதேபோல் தி.மு.க. அரசை கண்டித்து மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் சங்ககிரி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.

தலைவாசல்

தலைவாசலில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான ராமசாமி தலைமை தாங்கினார். தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்ப பெறக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதில், கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் வடக்கு ஒன்றிய பொருளாளர் தர்மராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் கணேசன், தலைவாசல் தெற்கு ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், சிவகுமார், ராமசாமி, மதியழகன், அருணாசலம், ஊராட்சி மன்ற தலைவர்கள் வரகூர் ராமசாமி, சிறுவாச்சூர் சுமதி பெரியசாமி, நாவக்குறிச்சி தமிழரசி பிரபு, இலுப்பநத்தம்ராஜவேல், புனல் வாசல் சிவா, ஒன்றிய கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைவாசல் ஒன்றிய குழு உறுப்பினர் மெய்யன் நன்றி கூறினார்.

சங்ககிரி

சங்ககிரியில் நடந்த அ.தி. மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு சங்ககிரி ெதாகுதி எம்.எல்.ஏ. சுந்தரராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சி.ஆர். ரத்தினம் முன்னிலை வகித்தார்.

இதில் சேலம் புறநகர் மாவட்ட துணை செயலாளர் வேலுமணி, சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, சேலம் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவகுமாரன், சங்ககிரி நகர செயலாளர் செல்வம், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மருதாசலம், முன்னாள் நகரசெயலாளர் ஆர்.செல்லப்பன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாதையன், சாமியம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கதலைவர் சங்கமேஸ்வரன், ஒன்றிய மாணவர்அணி செயலாளர் சரவணன், திருவாண்டிபட்டி கூட்டுறவு சங்க தலைவர் வினோஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராமசாமி, மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, கவுன்சிலர்கள் முருகேசன், கே.வி.எஸ்.சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story