தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையம் எதிரே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் விஜயாஜெயராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மண்டல தலைவர் விஜயலட்சுமிகண்ணன், மாநகர துணை செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், டாக்டர் தமிழரசிசுப்பையா உள்பட தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொற்கொடி தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரம்யாபேகம் வரவேற்றார். திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாநில இணை செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா, மாவட்ட துணை செயலாளர் லீலாவேலு, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கயல்விழி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த கோரியும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் முதல்-மந்திரி பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.


Next Story