தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து வேலூரில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

வேலூர்

மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து வேலூர் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வாசுகி தலைமை தாங்கினார். பிரசார அணி மாநில செயலாளர் அமலு விஜயன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மகளிர் அணி தொண்டர் அணி அமைப்பாளர் மஞ்சுளா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலர் பேசினர்.

மத்திய அரச கண்டித்து கோஷம்

மத்திய அரசை கண்டித்து மகளிர் அணி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விமலா சீனிவாசன், தவமணி தாமோதரன், டீட்டா சரவணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பாளரும், மாநகராட்சி மேயருமான சுஜாதா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story