தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவு தேர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார்.

தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், மருத்துவரணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவு தேர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கருணாநிதி, திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணிகலைமணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.கலைமணி, நிர்வாகிகள் பொன்.முத்து, வக்கீல்கள் அருள்குமரன், பழனி, வெற்றி டிஜிட்டல் கார்த்திக், தொண்டரணி ஷெரீப் உள்பட திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story